ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் ஒரு நாள் மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது. இலங்கை அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது.. கடைசி கட்ட ஆட்டக்காரர்கள் இருவர் நிலைத்து ஆடி அணியை வெற்றி பெற செய்தனர்..இப்போட்டியில் ஏதோ இந்தியாவே வென்றது போல நண்பர்கல் சிலர் ஆர்ப்பரித்து கொண்டாடினர். காரணம் ஆஸ்திரேலியா அணி மண்ணை கவ்வியதாம்! தமிழக மீனவர்களை ஆஸ்திரேலியா சுடுகின்றதா? ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் மனிதர்களை (தமிழர்களை) ஆஸ்திரேலியா கொன்றதா? எவ்வித்த்தில் நமக்குஆஸ்திரேலியா இலங்கையை விடவும் எதிராகி விட்டது? இந்திய வம்சாவளிகள் சிலரை ஆஸ்திரேலியர்கள் தாக்கியதாலா? ஆம் எனில்.. தம் சொந்தங்கள் கொத்து கொத்தாய் சாவதை கண்டு தீப்பற்றி எரிந்த தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா??? இது விளையாட்டு தான் என்றாலும் விடுதலை என்பது விளையாட்டல்ல……………
———————————————————————————–கேளன்.
———————————————————————————–கேளன்.
No comments:
Post a Comment