Thursday, December 2, 2010

விளையாட்டல்ல விடுதலை

ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் ஒரு நாள் மட்டைப்பந்து போட்டி நடைபெற்றது. இலங்கை அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது.. கடைசி கட்ட ஆட்டக்காரர்கள் இருவர் நிலைத்து ஆடி அணியை வெற்றி பெற செய்தனர்..இப்போட்டியில் ஏதோ இந்தியாவே வென்றது போல நண்பர்கல் சிலர் ஆர்ப்பரித்து கொண்டாடினர். காரணம் ஆஸ்திரேலியா அணி மண்ணை கவ்வியதாம்! தமிழக மீனவர்களை ஆஸ்திரேலியா சுடுகின்றதா? ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் மனிதர்களை (தமிழர்களை) ஆஸ்திரேலியா கொன்றதா? எவ்வித்த்தில் நமக்குஆஸ்திரேலியா இலங்கையை விடவும் எதிராகி விட்டது? இந்திய வம்சாவளிகள் சிலரை ஆஸ்திரேலியர்கள் தாக்கியதாலா? ஆம் எனில்.. தம் சொந்தங்கள் கொத்து கொத்தாய் சாவதை கண்டு தீப்பற்றி எரிந்த தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா??? இது விளையாட்டு தான் என்றாலும் விடுதலை என்பது விளையாட்டல்ல……………
———————————————————————————–கேளன்.

சவக்குழிகள்

சவக்குழிகள்
பாதாள கழிவு நீர் திட்டமென்று
பெயர் வைத்து
பள்ளம் பல  எடுத்து
சாலைகளை கெடுத்து
ஆகிறது நான்காண்டு
பள்ளங்கள் சவக்குழிகளாக
மாறிவிட்டன ………
மக்களுக்கு இன்று ….
ஆட்சியாளர்களுக்கு நாளை ……….
——————————————-கேளன்.

நட்பெண்ணும் உறவு

நட்பு உறவுகளே …,
வணக்கம்.மனிதர் சக மனிதர்களுக்கு எளிதாக தர கூடியது அன்பு ஒன்றுதான்.  எனவே நாமும் ,அனைவர்க்கும் அன்பை கொடுத்து மகிழ்வோம்.நண்பர்களும் உறவுகளுமாய் இருப்போம் .நம் உறவுக்கு பெயர் நட்பு .நாம் நண்பர்களென்ற உறவு . ஆம் நமக்குள் இருப்பது நட்புறவு .
……. தோழமையுடன் கேளன்.