வரலாறு "கிமு -கிபி " யாக இருப்பதைப் போல திரையுலகம் "திமு -திபி "யாக இருக்கிறது .திரைக்கு முன்னால்...திரைக்கு பின்னால் என. திரைக்கு முன்னாலிருக்கும் கதைகளை பலப் படங்கள் வேண்டிய அளவிற்கும் அதிகமாகவே பேசி இருக்கின்றன . ஆனால் 'திரையை ' ப் பற்றி ... திரைக்குப் பின்னால் இருக்கும் கதைகளை மிகச் சிலப் படங்களே பேசி இருக்கின்றன . அப்படி ... திரைக்குப் பின்னால் இருக்கும் கதையொன்றை துணிந்துப் பேசுகிறது இப்படம் -கேமரா கவிஞர் பாலுமகேந்திராவின் "மறுபடியும்".
ஒரு திரைப்பட இயக்குனர் .அவரின் மனைவி .அந்த இயக்குனரால் முன்னனிக்கு வந்த ஒரு திரைப்பட நடிகை .இந்த மூவரைச் சுற்றியும் கதை பின்னப் பட்டிருக்கிறது அல்லது கதைக்குள் இந்த மூவரும் பிரதனமாயிருக்கிரார்கள் . இயக்குனருக்கும் அவர் மனைவிக்குமான குடும்ப வாழ்வில் இருந்து தொடங்குகிறது படம் . இயக்குனருக்காக அனைத்து உறவுகளையும் உதறித்தள்ளிவிட்டு வந்திருக்கிறாள் அவள் மனைவி துளசி.
துளசி அன்பும் அழகும் கொண்ட பாத்திரமாக உலா வருகிறாள் . மிகுந்த ரசனைக்காரியாக இருக்கிறாள் . வேலைக்காரி அடிக்கும் பகடிக்கு வாய் விட்டு ரசித்துச் சிரிக்கிறாள் . உணர்வுகளின் உறைவிடமாக இருக்கிறாள் . அறிமுகம் இல்லாத நபரிடம் தன் கணவர் வாங்கித் தந்த சொந்த வீட்டைப் பற்றி சிலாகிக்கும் இடத்தில் சிறுமியாகிறாள். பூச்செடிகளை சேகரித்துப், பராமரிக்கையில் பெண்ணாகிறாள் . குயிலுடன் கூ .. கூ.. வென பேசும் காட்சியில் தாயாகிறாள் . குயிலுக்கும் துளசிக்குமான கூ .. கூ.. காட்சி மயில் தன் தோகையை விரிப்பதைப் போல் நம் மனதில் வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறது. It is one of the wonderful poems that i ever read.
No comments:
Post a Comment